பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்: ஒருவர் கைது
பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார்.
பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்
நேற்று, அதாவது, திங்கட்கிழமை மாலை Toulouse நகரிலுள்ள Rue d'Austerlitz என்னுமிடத்தில் பொலிசார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களை கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நகர மேயரான Jean-Luc Moudenc, தாக்கப்பட்ட பொலிசார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ள நிலையில், காயமடைந்த பொலிசாரின் நிலைமை குறித்து யாரும் தெரிவிக்கவில்லை.
மேலும், பொலிசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Moudenc தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |