சுவிட்சர்லாந்தில் மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் குத்திக்கொன்ற நபர் கைது
சுவிஸ் நகரமொன்றில், தன் மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் குத்திக்கொன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்
சனிக்கிழமை, சுவிட்சர்லாந்தின் Fribourg நகரிலுள்ள வீடொன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை உருவாக்குவதாக அமைந்திருந்தது.
ஆம், 30 வயதுப் பெண்ணொருவரும், அவரது பச்சிளங்குழந்தையும் அங்கு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தார்கள்.
அந்தப் பெண்ணின் கணவரும் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், தன் மனைவியையும் குழந்தையையும் கத்தியால் குத்திக் கொலை செய்தது தான்தான் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரும் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக கருதப்படுகிறது.
எதற்காக இப்படி தன் மனைவியையும் குழந்தையையும் அவர் கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |