பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நபர் கைது
பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் கைது
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைமன் ஷில்லா. இவர் பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது வீட்டையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதாவது, பஹல்காம் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |