மசாஜ் செய்ய சென்ற இடத்தில் தன்னை விட 11 வயது குறைவான நபரால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!
அமெரிக்காவில் மசாஜ் செய்ய சென்ற இடத்தில் பெண்ணுக்கு நடந்த கசப்பான அனுபவத்தையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினோ ஹில்ஸை சேர்ந்த 49 வயதான பெண் கடந்த திங்கட்கிழமை அன்று மசாஜ் செய்து கொள்வதற்காக மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ (38) என்பவரிடம் சென்றுள்ளார்.
அங்கு ஓமர் அப்பெண்ணிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனே இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் ஓமரை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் ஓமரால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.