பெண்களைக் கொல்ல அனுப்பினார்! பாரிஸில் மகளிரை கத்தியால் தாக்கிய நபர்..அதிர்ச்சி வீடியோ
பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியால் தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Porte de Clichy பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து இரண்டு கத்திகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கவலைக்கிடமாக ஒருவர்
இருவர் பலத்த காயமடைந்தாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் மற்றும் பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 31 வயது நபர் "பெண்களைக் கொல்ல கடவுள் என்னை அனுப்பினார் என்று கூறினார்" என்று Le Parisien இதழிடம் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர், ஆயுதத்துடன் பெண்ணை நோக்கி செல்லும் மற்றும் மடக்கிப் பிடிக்கப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |