இளைஞனால் 2 ஆண்டுகளாக 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை! வெளியான புகைப்படம்
அமெரிக்காவில் 12 வயது சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
டெக்ஸாஸை சேர்ந்த டாமினிக் அமாடர் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டவன் ஆவான்.
கடந்த 2019ல் இருந்து 12 வயதான சிறுவனை பாலியல் ரீதியாக டாமினிக் துன்புறுத்தி வந்துள்ளான்.
இது தொடர்பான புகாரில் பொலிசார் சமீபத்தில் டாமினிக்கை கைது செய்தனர்.
ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டை அவன் மறுத்த நிலையில் பின்னர் ஒப்பு கொண்டுள்ளான்.
தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கும் டாமினிக்கின் ஜாமீன் தொகையாக $100,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.