தனது பாதுகாப்புக்காக நம்பிய சிறுமி! அந்த நம்பிக்கையை அவன் தகர்த்தான்...பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரஞ்ச்பர்க் கவுண்டியை சேர்ந்த மைக்கேல் ப்ளேட் ஹோவர் (26) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
2020 இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சிறுமி மீது மைக்கேல் பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். பொலிசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாதுகாப்புக்காக மைக்கேலை நம்பியிருக்கிறார்.
ஆனால் அந்த நம்பிக்கையை மோசமான வழியில் அவர் தகர்த்திருக்கிறார். இது தொடர்பான விசாரணைக்கு பின்னர் மைக்கேலை கைது செய்தோம் என கூறியுள்ளனர்.
கைதான மைக்கேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.