செல்போனில் இருந்த 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள்! கைதான 39 வயது ஆண்.. குடும்பத்தார் கூறிய பகீர் தகவல்
அமெரிக்காவில் 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை செல்போனில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரன் நகரை சேர்ந்த கிறிஸ்டன் ராபர்ட்ஸ் (39) என்பவரே கைதான குற்றவாளி ஆவார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்த நிலையிலேயே ராபர்ட்ஸை பொலிசார் பிடித்தனர்.
அதன்படி 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ராபர்ட்ஸ் அவரை தனது இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் தவறான முறையில் இருந்துள்ளனர். இதையடுத்து சிறுமியை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்த ராபர்ட்ஸ் அதை தனது போனில் வைத்திருக்கிறார்.
ராபர்ட்ஸ் போனையும் பொலிசார் கைப்பற்றியுள்ள நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.