பிரித்தானியாவில் 10 நாட்களாக மாயமான இளம்பெண் எங்கே? பொலிஸில் சிக்கிய ஆண்... புகைப்படங்கள்
பிரித்தானியாவில் 30 வயதான இளம்தாயார் 10 நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எசக்ஸை சேர்ந்தவர் மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் காந்த 22ஆம் திகதி கடைசியாக காணப்பட்ட நிலையில் பின்னர் மாயமானார். கடந்த 26ஆம் திகதி மடிசனின் கருப்பு நிற கார் பொலிசாரால் Brackendale அவென்யூவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ESSEX POLICE
இந்த நிலையில் மடிசன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே இன்னும் தெரியாமல் உள்ளது. அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான நபர் மடிசனுக்கு நன்கு அறிமுகமானவர் என தெரியவந்துள்ளது. இதனிடையில் மடிசன் தொடர்பில் எதாவது சிசிடிவி காட்சிகள் அல்லது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

ESSEX POLICE
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        