பிரித்தானிய உள்விவகார செயலரை கொந்தளிக்க வைத்த சம்பவத்தில் புதிய திருப்பம்: ஒருவர் கைது
பிரித்தானியாவில் 11 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய XL bully நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடையே கொந்தளிப்பு
பர்மிங்காம் பகுதியில் தமது சகோதரியுடன் கடைக்கு சென்ற 11 வயது சிறுமி Ana Paun நாய் தாக்குதலுக்கு இலக்கானார். இந்த சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி ஒன்று பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Credit: SWNS
சிறுமியை அந்த நாயிடம் இருந்து காப்பாற்ற முயன்ற இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் பிரித்தானிய உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேனை கொதிப்படைய செய்திருந்தது.
இந்த நிலையில் சிறுமியை தாக்கிய XL bully நாயின் உரிமையாளர் 60 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நபரை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூன்று சிறார்கள் உட்பட
இருப்பினும், கைப்பற்றப்பட்ட அந்த நாய் தற்போதும் காப்பகம் ஒன்றில் பாதுகாக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் மோனிகா தெரிவிக்கையில், தமது மகள் அந்த நாயால் கொல்லப்பட்டிருப்பார். இது போன்ற ஆபத்தான வகை நாய்களை பொதுமக்களிடம் இருந்து விலக்கி வைத்துப்பது நல்லது என்றார்.
Credit: Tiktok
அத்துடன், சிறுமி Ana Paun தெரிவிக்கையில், ஆபத்தான வகை நாய்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும் என்றார். முன்னதாக இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அந்த வகை நாய்களை நாம் ஏன் தடை செய்யக் கூடாது என்பது குறித்து ஆலோசனை பெற அதிகாரிகளை நாடியதாக உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்திருந்தார்.
சிறார்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்து நாய் வகை அது என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் கடந்த 2021 முதல் ஆபத்தான XL bully நாயால் தாக்கப்பட்டு மூன்று சிறார்கள் உட்பட 9 பேர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Alamy
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |