தான் இல்லாதபோது தன் வீட்டுக்குள் யாரோ நடமாடுவதை அறிந்த பிரித்தானியர்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம்
பிரித்தானியாவில், தனக்குச் சொந்தமான வீடு ஒன்றிற்குத் திரும்பிய தேவாலய ஊழியர் ஒருவர், தன் வீட்டில் மின்விளக்குகள் எரிவதையும், யாரோ நடமாடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Bedfordshireஇலுள்ள தனது வீட்டிற்குச் சென்று பார்த்த Rev Mike Hall என்னும் அந்த நபர், அங்கு கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடப்பதைக் கண்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், தான் அந்த வீட்டின் உரிமையாளர் என்றும், அந்த வீட்டை 131,000 பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Rev Mike, பொலிசாரிடம் புகாரளிக்க, அவர்கள் விசாரித்ததில் அவரது வீடு 131,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளதும், வீட்டின் உரிமையாளர் என வேறொருவர் பெயர் நில பதிவு அலுவலகத்தில் பதிவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டிலிருந்த நபரை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.