பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு
பிரித்தானிய நகரமொன்றில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அச்சுறுத்திய நபரை பொலிஸார் சுட்டுப்பிடித்தனர்.
அச்சுறுத்திய நபர்
வால்தாம்ஸ்டோவின் ஸ்டோவ் கிரசென்ட்டில் இருந்து 999 எண்ணுக்கு கிடைத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
நபர் ஒருவர் வீட்டிற்குள் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவர் மற்றவர்களை அச்சுறுத்துவதுடன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதாகவும் குடும்ப உறுப்பினர்கள் அதில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்தனர். மற்றவர்களை சுட்டுவிடுவதாக குறித்த நபர் அச்சுறுத்தியதால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் சில மணிநேரம் கடக்க, பிற்பகல் 2 மணியளவில் உள்ளே இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து இல்லை
அதிரடியாக உள்ளே நுழைந்த பொலிஸார் குறித்த நபரை சுட்டுப்பிடித்து ஆயுதத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
அந்நபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அவர் பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும், பொதுமக்களுக்கு பெரிய ஆபத்து இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |