அவன் அரக்கனைப் போல இருந்தான்: கதறிய இளம்பெண்..ஆடையில்லாத நிலையில் நபர் கைது
Man arrested who tried kidnap hawaii woman: அமெரிக்காவில் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் இளம் பெண்ணை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது ஆட்கடத்தல் மற்றும் இரண்டாம் நிலைத் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
24 வயது இளம்
அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனோலுலுவில் மர்ம நபர் ஒருவர், வாகன நிறுத்துமிடத்தில் 24 வயது இளம் பெண்ணை கடத்த முயன்றார்.
வலுக்கட்டாயமாக அப்பெண்ணை அந்நபர் தூக்கிச் செல்ல முயற்சிக்க, 77 வயதான மற்றொரு பெண் பயத்தில் கூச்சலிட்டுள்ளார். அதேபோல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலரும் சத்தமிட்டுள்ளனர்.
பின்னர் அவர் அந்த இளம் பெண்ணின் கையைப் பிடிக்க முயல, அந்தப் பெண் அங்கிருந்து ஓடத் தொடங்கியிருக்கிறார்.
ஆனாலும் அந்த மர்ம நபர் துரத்திச் சென்றிருக்கிறார். இந்த நிகழ்வுகள் அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானது.
அதன் அடிப்படையில் பொலிசார் விசாரணையைத் தொடங்க, மூன்று மணிநேரம் கழித்து அருகிலுள்ள தெருவில் ஆடையின்றி ஓடிக் கொண்டிருந்த அந்நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்நபர் 23 வயது கவெலோ என்று தெரிய வந்தது. அவர் மீது ஆட்கடத்தல் மற்றும் இரண்டாம் நிலைத் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்கான பிணைத்தொகை 500,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையில், அப்பெண்ணின் வயதான தோழி செய்தி ஊடகத்திடம், "நான் உதவி! உதவி! என்று கத்திக் கொண்டிருந்தேன், அவளும் கத்திக்கொண்டிருந்தாள். அவன் ஒரு அரக்கனைப் போல இருந்தான். அவன் கண்களில் மிகுந்த வெறுப்பும் வெறியும் நிறைந்திருந்தது" என்றார்.