மும்பையில் இருந்து கும்பமேளா நடைபெறும் இடம் வரை ‘லிஃப்ட்’ கேட்டு வந்தடைந்த இளைஞர்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மகா கும்பமேளாவில் புனித நீராட லிஃப்ட் கேட்டு வந்தடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
லிஃப்ட் கேட்டு வந்தடடைந்த இளைஞர்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மகா கும்பமேளாவில் புனித நீராட லிஃப்ட் கேட்டு வந்துள்ளார்.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் திவ்ய ஃபபோனி (22). இவர், மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்ல விரும்பினார். இதற்காக பிரயாக்ராஜ் வரை லிஃப்ட் கேட்டு செல்ல முடிவு செய்தார்.
அவரது கையில் லிஃப்ட் என எழுதப்பட்ட போர்டை கையில் வைத்துக்கொண்டு கடந்த 12-ம் திகதி மும்பையில் இருந்து புறப்பட்டார். பின்னர், பைக், ஸ்கூட்டர், கார், லொறி போன்ற வாகனங்களை வழிமறித்தார்.
அதன்படி மும்பையில் இருந்து நாக்பூர் மற்றும் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் வரை 1,500 கி.மீ தூரத்தை பல்வேறு வாகனங்களில் பயணம் செய்து கடந்து விட்டார்.
ஆனால், ஜபல்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை லொறிகள் உள்ள செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், உள்ளூர்வாசிகள் உதவியுடன் 2 நாள் பயணம் செய்து பிரயாக்ராஜ் வந்தடைந்தார்.
இந்த அனுபவத்தை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் திவ்ய ஃபபோனி பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்தியர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்றும், இந்த ஒற்றுமை தான் நாட்டை இணைக்கிறது என்றும் கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |