பொது வெளியில் சொந்த சகோதரியை சீரழித்து... இளைஞர் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் பின்னணி
ஸ்கொட்லாந்தில் சொந்த சகோதரியை சீரழித்து கொலை செய்த இளைஞர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் அப்பாவியாக அஞ்சலி பதிவிட்டதும் அம்பலமாகியுள்ளது.
சீரழித்து கொலை
ஸ்கொட்லாந்தின் ஹாமில்டன் பகுதியில் 20 வயதான கானர் கிப்சன் என்ற இளைஞன் 2021 நவம்பர் 26ம் திகதி தமது சகோதரி 16 வயதான அம்பர் என்பவரை சீரழித்து கொலை செய்துள்ளார்.
Image: Police Scotland
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமது குற்றத்தை கானர் கிப்சன் ஒப்புக்கொண்டுள்ளார். தொடக்கத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள கிப்சன், 13 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணையின் முடிவில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று கானர் கிப்சன் தமது சகோதரியிடம் கொடூரமாக நடந்து கொண்டுள்ளது நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மட்டுமின்றி, சமூக ஊடக பக்கத்தில் தமது சகோதரி தொடர்பில் உயர்வாக பதிவிட்ட கானர் கிப்சன், பிரிவை தாங்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 26ம் திகதி மதியத்திற்கு மேல் இருந்து அம்பர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் 28ம் திகதி பூங்கா ஒன்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
ஆயுள் தண்டனை
டிசம்பர் 1ம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் கிப்சனை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையின் ஒரு கட்டத்தில் கிப்சனின் முன்னாள் வளர்ப்பு தந்தை Craig Niven தெரிவிக்கையில், கிப்சன் மற்றும் அம்பர் ஆகியோரை ஒருபோதும் தாம் தனியாக விட்டுச் சென்றதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Image: Garry F McHarg
அம்பருக்கு 3 வயதாக இருக்கும் போதே சகோதரர்கள் இருவரையும் Craig Niven தம்பதி தத்தெடுத்துள்ளது. அம்பர் கொல்லப்படும் போது கானர் கிப்சன் ஹாமில்டனில் உள்ள ஆதரவற்றவர்கள் இல்லத்தில் தங்கி வந்துள்ளார்.
நவம்பர் 26ம் திகதி தமது சகோதரியை திட்டமிட்டே, Cadzow Glen பூங்காவுக்கு அழைத்துச் சென்று, கொடூரமாக தாக்கி, பின்னர் சீரழித்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் கானர் கிப்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |