பிரான்ஸ் பெண்ணுக்கு மோட்சத்தைக் காட்டுவதாக அழைத்துச் சென்ற நபர்: பின்னர் நிகழ்ந்த பயங்கரம்
இந்தியாவுக்குச் சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவருக்கு மோட்சத்தைக் காட்டுவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று அவரிடம் அத்துமீறியுள்ளார் சுற்றுலா வழிகாட்டி ஒருவர்.
இந்தியாவுக்குச் சுற்றுலா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டவரான 46 வயது பெண்ணொருவர், தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை என்னுமிடத்தில் ஆஸ்ரமம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
சுற்றுலா வழிகாட்டியாகிய வெங்கடேஷ் என்னும் நபர், மோட்சத்துக்கு வழி காட்டுவதாகக் கூறி, தடை செய்யப்பட்ட மலை ஒன்றிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த மலையில் 2668 அடி உயரத்தில் அமைந்துள்ள குகை ஒன்றைக் கண்ட அந்தப் பெண், அங்கு தியானம் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது வெங்கடேஷ் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அங்கிருந்து தப்பி மலையிலிருந்து இறங்கிய அந்தப் பெண், பொலிசாரிடம் புகார் செய்துள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பொலிசார், தனிப்படை ஒன்றை அமைத்து வெங்கடேஷைக் கைது செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |