லண்டனில் 14 வயது சிறுமி மற்றும் பெண்ணை தாக்கிய நபர்! பின்னர் செய்த மோசமான செயல்... சிசிடிவி புகைப்படங்கள்
லண்டனில் மூன்று வெவ்வெறு சந்தர்ப்பங்களில் மூன்று பேரை தாக்கிய நபர் தொடர்பிலான சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் 11ஆம் திகதி 14 வயது சிறுமி பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது அவர் பின் இருக்கையில் வந்து அமர்ந்த நபர் வெளிப்படையான காரணம் எதுவுமின்றி அவளை தலையின் பின்புறத்தில் தாக்கியிருக்கிறார்.
பின்னர் மோசமான வார்த்தைகளால் சிறுமியை திட்டிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளார். அதே நாளில் மதியம் 12.30 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கு திருடும் நோக்கில் அவர் சென்றிருக்கிறார்.
ஆனால் மர்ம நபரால் திருட முடியாத நிலையில் அங்கிருந்த பெண் ஊழியரை தலையில் தாக்கிவிட்டு ஓடியுள்ளார்.
இதற்கு அடுத்தநாள் இரவு 8 மணியளவில் பேருந்து ஒன்றில் ஏறிய அந்த மர்ம நபர் ஓட்டுனரை கடுமையாக முகம், தொண்டையில் தாக்கிவிட்டு ஓடியுள்ளார்.
தற்போது வரை அந்த மர்ம நபர் பொலிலிசில் சிக்காத நிலையில் அவர் தொடர்பிலான சிசிடிவி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவரின் வயது 30ல் இருந்து 35க்குள் இருக்கும் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.
அந்த நபரை அவசரமாக கண்டுபிடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

