சுவிட்சர்லாந்தில் குழந்தையுடன் பயணித்த உக்ரைன் நாட்டு தம்பதியரை தாக்கிய நபர்
சுவிட்சர்லாந்தில், தங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த உக்ரைன் நாட்டு தம்பதியரை, ரஷ்ய மொழி பேசும் நபர் ஒருவர் தாக்கியதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு தம்பதியரை தாக்கிய நபர்
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Interlaken மற்றும் Spiez நகரங்களுக்கிடையே பயணிக்கும் ரயில் ஒன்றில், உக்ரைன் நாட்டவர்களான ஒரு தம்பதியர் தங்கள் ஒரு வயதுக் குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அவர்கள் உக்ரைன் மொழியில் பேசுவதைக் கவனித்த அதே ரயிலில் பயணித்த ஒருவர் அவர்களை வம்புக்கிழுத்துள்ளார்.
ரஷ்ய மொழி பேசிய அந்த நபர் அவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், ஒரு கட்டத்தில் அவர்களை தாக்கியும் உள்ளார்.
அதைத் தொடர்ந்து Olena Dudnyk என்னும் அந்த உக்ரைன் பெண் பொலிசாரை அழைத்துள்ளார்.
ஆனால், சுவிஸ் பொலிசார் அலட்சியம் காட்டியதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் Olena.
இந்நிலையில், அந்த சம்பவம் பயங்கரமானது என உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளதுடன், தங்கள் நாட்டவர்களான தம்பதியரைத் தாக்கிய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு உக்ரைன் அரசு சுவிஸ் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், தம்பதியரைத் தாக்கிய நபர் லாத்வியா நாட்டவர் என்றும், அவரது பெயர் Alexander Vabix என்றும், பெண்களையும் குழந்தைகளையும் மோசமான வார்த்தைகளால் மிரட்டும் வழக்கம் கொண்டவர் என்றும், Olena வெளியிட்ட வீடியோவைப் பார்த்த பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |