புதிது புதிதாக மோசடிகள்: பிரித்தானியா செல்வதற்காக மோசடி செய்த இந்தியர் சிக்கினார்
பிரித்தானியா செல்வதற்காக புதிது புதிதாக மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் சிலர். அப்படி மோசடி வேலை ஒன்றைச் செய்த இந்தியர் ஒருவர், மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார்.
பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்
இந்திய இளைஞர்கள் பிரித்தானியாவில் இரண்டு ஆண்டுகள் தங்கி, பணியாற்றும் வகையில் uk Youth Mobility Scheme என்னும் ஒரு திட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அந்த திட்டத்தையும் பயன்படுத்தி மோசடியில் இறங்கியுள்ளனர் சிலர். அவ்வகையில், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த Jatin Kikani என்பவர், பிரித்தானியா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார்.
Curly Tales
uk Youth Mobility Scheme திட்டத்தின் கீழ் அவர் பிரித்தானியா செல்வதாக அவரது பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்பட்டிருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அத்திட்டம் குறித்து அவரை விசாரித்துள்ளனர். அவருக்கோ, அத்திட்டம் குறித்து சரியாகத் தெரியவில்லை.
மேலும், அவருடைய சான்றிதழ்களைப் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள், அவர் மஹாராஷ்டிராவிலுள்ள அமராவதி என்னுமிடத்திலுள்ள பல்கலை ஒன்றிலிருந்து BSc பட்டம் பெற்றதாக சான்றிதழ் வைத்திருப்பதைக் கண்டு, அவரிடம் அமராவதியைக் குறித்து விசாரிக்க, அவருக்கு அந்த இடம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆகவே, அவர் மீது சந்தேகம் வலுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் தெரியவந்த உண்மை
அந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில், தனது BSc சான்றிதழும், uk Youth Mobility Scheme சான்றிதழும் போலியானவை என்பதையும், தான் குஜராத்திலுள்ள ஏஜண்ட் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அந்த சான்றிதழ்களையும், போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி விசாவையும் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார் Jatin.
அதிகாரிகள், அவரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |