பெயர் காரணமாக 10 ஆண்டுகள் பறக்க தடை விதித்த விமான நிறுவனம்- பிரித்தானியர் பாதிப்பு
பிரித்தானியாவிச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவர், தனது பெயர் மற்றும் பிறந்த தேதியின் காரணமாக ஈஸிஜெட் விமானத்தில் பறக்கத் தவறுதலாகத் தடை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
பயணத்திற்கு முந்திய நாள் வந்த மின்னஞ்சல்
செஷையரைச் சேர்ந்த கீரன் ஹாரிஸ் (Kieran Harris) என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், தனது நண்பர்களுடன் ஸ்பெயினுக்கு விடுமுறைக்கு தயாராக இருந்தபோது இந்த விடயம் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.
அவரது விமானம் புறப்படுவதற்கு முந்தைய நாள், "முந்தைய இடையூறு நடத்தை" காரணமாக விமானத்தில் அவர் ஏற முடியாது என்று அவருக்கு மின்னஞ்சல் வந்தது.
Kieran HarrisImage: Kennedy News and Media
10 வருடங்கள் பறக்க தடை
அதுமட்டுமின்றி, இந்த விமான நிறுவனத்துடன் அவருக்கு ''10 வருடங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது'' என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த பந்து ஆண்டுகள் என்பது 2031 மார்ச்சில் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு ஈஸிஜெட் விமானத்தில் குடிபோதையில் ஆக்ரோஷமாகவும் தவறாகவும் நடந்துகொண்டதற்காக 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் என விமான நிறுவனம் தன்னை குழப்பிக்கொண்டதாக ஹாரிஸ் கூறுகிறார்.
Image: Kennedy News & Media / Cavendish Press முதல் படம் தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பட்ட Kieran Harris; இரண்டாவது படம் உண்மையாக குடிபோதையில் தவறாக நடந்துகொண்ட நபர்
எல்லாவற்றுக்கும் மேலாக, ஹாரிஸின் பிறந்தநாளும் அந்த தவறான நடத்தை கொண்டவரின் பிறந்தநாளும் ஒரே திகதியாக இருப்பதாக அவர் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, EasyJet அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது பாஸ்போர்ட்டின் படத்தைக் கோரிய பிறகு சிக்கல் தீர்க்கப்பட்டது. இறுதியில் தற்செயலாக அவர் மீது விதிக்கப்பட்ட தடையை நிறுவனம் நீக்கியது.
மன்னிப்பு கேட்ட ஈஸிஜெட்
இந்த கசப்பான அனுபவத்தால், எதிர்காலத்தில் ஈஸிஜெட் மூலம் தான் நிச்சயமாக பறக்க விரும்பமாட்டேன் என கூறியிட்டுள்ளார்.
இதையடுத்து, ஈஸிஜெட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார்.
Easyjet
இருப்பினும், முழு அனுபவத்திலும் அவர் மிகவும் விரக்தியடைந்துள்ளார், இது தொடர்ந்து நடந்தால் பெயரை மாற்றுவது பற்றி அவர் யோசித்து வருகிறார்.
இது முதல் முறையல்ல
ஹாரிஸ் குற்றவாளி என்று தவறாகக் கருதப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, அவரை தவறான கீரன் ஹாரிஸ் என்று தவறாகக் கண்டறிந்த பின்னர், பெருநகர காவல்துறை குண்டு துளைக்காத உடையில் அவரது வீட்டைத் தாக்கியது. இதற்காக பெருநகர காவல்துறையும் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.