கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் அடித்துக்கொலை
கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபரரை, 25 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடுப்பு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்
இந்த போட்டியின் போது மாலை 3 மணியளவில், அங்கிருந்த நபர் ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியதால், அங்கிருந்த 25 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்த கோவில் ஒன்றின் அருகே மாலை 5 மணியளவில் கடுமையான காயங்களுடன் கிடந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். பிரதே பரிசோதனையில் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் அடையாளம் காணப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக தாக்குதலில் ஈடுபட்டதாக 15 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தில் உள்ள 10 நபர்களை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |