23 வயதிலேயே பெரும் கோடீஸ்வரர்... முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்: அவரது தற்போதைய சொத்து மதிப்பு
ஜனவரி 6ம் திகதி மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசனை விஞ்சி உலகின் மூன்றாவது பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை எட்டினார்.
பங்கு விலைகளில்
ஜனவரி 3 ம் திகதி நடந்த இரண்டு தொழில்நுட்பத் தலைவர்களுக்கிடையேயான போட்டி பரிமாற்றத்தைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 4 சதவிகிதம் அதிகரித்து 217.7 பில்லியன் டொலர் என பதிவானது.
ஆனால் லாரி எலிசனின் சொத்து மதிப்பு 0.3 சதவிகிதம் சரிவடைந்து அன்றைய நாள் 209 பில்லியன் டொலர் என பதிவானது. அவர்களின் சொத்துக்களில் ஏற்பட்ட இந்த ஏற்ற இறக்கங்கள் அந்தந்த நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்பட்டன.
ஜுக்கர்பெர்க்கின் மெட்டா பங்குகள் 4 சதவிகிதம் உயர்வைப் பதிவு செய்து 630.20 டொலர் என முடிவடைந்தது. அதேவேளை, எலிசனின் ஆரக்கிள் பங்குகள் 0.3 சதவிகிதம் சரிந்து 165.78 டொலராக பதிவானது.
எலிசன் தொடர்ச்சியாக மூன்றாமிடத்தில் நீடித்து வந்திருந்தார். நான்காமிடத்தில் ஜுக்கர்பெர்க் தொடர்ந்தார். இந்த நிலையிலேயே பங்கு விலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எலிசனிடம் இருந்து மூன்றாமிடம் பறிபோயுள்ளது.
முதலிடத்தில், எவரும் மிக சமீபத்தில் நெருங்க முடியாத உச்சத்தில் எலோன் மஸ்க் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 425.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இரண்டாமிடத்தில் 241 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.
நியூயார்க்கில் 1984ல் பிறந்த மார்க் ஜுக்கர்பெர்க் 2004 ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்களான எட்வர்டோ சவேரின், ஆண்ட்ரூ மெக்கோலம், டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூஸ் ஆகியோருடன் இணைந்து பேஸ்புக் நிறுவனத்தை நிறுவினார்.
யாகூ நிறுவனம் முயன்றது
பேஸ்புக் விரைவிலேயே உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாக மாறியது. 2007 ல், தமது 23 வயதிலேயே ஜுக்கர்பெர்க் இளம் வயது பெரும் கோடீஸ்வரர் அந்தஸ்தை எட்டினார்.
2012ல் மிக முக்கிய முடிவாக, பேஸ்புக்கை பொதுத்துறை நிறுவனமாக மாற்றினார். அப்போதிருந்து, அவர் தொடர்ந்து உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
2022ல், பேஸ்புக் நிறுவனம் 117 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டியது, மற்றும் தோராயமாக 3.7 பில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்டிருந்தது. மெட்டா பிளாட்ஃபார்ம்களின் பங்குகளில் சுமார் 13 சதவிகிதம் ஜுக்கர்பெர்க்கிடம் உள்ளது.
2004ல் Peter Thiel என்பவரின் நிறுவனத்தில் இருந்து 500,000 டொலர் முதலீடாகப் பெற்று தொடங்கப்பட்டது தான் மார்க் ஜுக்கர்பெர்க்கின் இந்த பயணம். 2005ல் 1 பில்லியன் டொலருக்கு சொந்தமாக்க யாகூ நிறுவனம் முயன்றுள்ளது.
ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் அதை நிராகரித்துள்ளார். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியுடனான நெருக்கத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜாம்நகரில் நடந்த அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் ஜுக்கர்பெர்க் தமது மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |