குட்டி பொம்மைகள் விற்று நிமிடத்திற்கு ரூ 9.52 கோடி சம்பாதிக்கும் நபர்... கவனம் ஈர்க்கும் லாபுபு
லாபுபு என்பது மென்மையான மற்றும் சேகரிக்கக்கூடிய பொம்மைகள் ஆகும், அவை தி மான்ஸ்டர்ஸ் என்ற புத்தகத் தொடரின் ஒரு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
Blind-box திட்டம்
பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாப் மார்ட்டின் 38 வயதான நிறுவனர் வாங் நிங், சீனாவின் இளம் பில்லியனர்களில் ஒருவராக மாறிவிட்டார். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த, குறும்புத்தனமான தோற்றமுடைய ஒரு சிறிய பொம்மையான லாபுபுவை உருவாக்கியதற்காக அவரது நிறுவனம் மிகவும் பிரபலமானது.
வெறும் ஒரு எளிய ஓவியம், பொம்மையாக தயாரிக்கப்பட்டு அது உலகமெங்கும் கவனத்தை ஈர்க்க காரணமாக அமைந்ததன் பின்னணியில், பாப் மார்ட் நிறுவனத்தின் Blind-box திட்டம் வெற்றி கண்டது.
லாபுபு பொம்மையை வாங்குபவர்கள், அதன் பொதியை திறக்கும் வரை தங்களுக்கு என்ன பொம்மை கிடைக்கும் என்று தெரியாத ஒரு வகையான ஆச்சரியம் விற்பனையை பன்மடங்கு அதிகரிக்க செய்தது.
மக்கள் விரைவில் லாபுபுவை விரும்பத் தொடங்கினர், அத்துடன் அது ஒரு பாப் கலாச்சார உணர்வாக மிக விரைவிலேயே மாறியது. லாபுபு பொம்மைகளின் பெரும் வெற்றியால் ஒரே ஆண்டிலேயே வாங் நிங் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் 2024ல் 7.59 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2025 ஜூன் மாதம் 22.1 பில்லியன் டொலராக குதித்தது. அவர் தற்போது சீனாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர்.
லாபுபு சீனாவில் மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் மக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர். மிக சமீபத்தில் ஆளுயர லாபுபு பொம்மை ஒன்று சீனாவில் 108 மில்லியன் யுவான் தொகைக்கு (கிட்டத்தட்ட ரூ 1.2 கோடி) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
நிமிடத்திற்கு ரூ 9.52 கோடி
லாபுபு பொம்மை விற்பனையால் நிமிடத்திற்கு ரூ 9.52 கோடி சம்பாதிக்கிறார் அதன் உரிமையாளரான வாங் நிங். லாபுபு என்ற கதாபாத்திம் ஹொங்ஹொங்கில் பிறந்த கலைஞர் காசிங் லுங் என்பவரால் உருவாக்கப்பட்டது.
கே-பாப் குழுவான பிளாக்பிங்கைச் சேர்ந்த லிசா என்பவர் லாபுபு பொம்மை ஒன்றை கையில் வைத்திருப்பது காணப்பட்ட பிறகு, பொம்மையின் புகழ் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.
விரைவில், கிம் கர்தாஷியன், ரிஹானா மற்றும் துவா லிபா போன்ற பிரபலங்களும் இதில் இணைந்தனர், இது உலகளாவிய ஃபேஷன் மற்றும் சேகரிப்பாளர் போக்காக மாறியது.
எப்போதெல்லாம் பாப் மார்ட் நிறுவனம் புதியவகை லாபுபு பொம்மை வெளியிட்டாலும், அதன் ரசிகர்கள் உடனையே அதை வாங்க முண்டியடிப்பதுடன், சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்றுவிடும் நிலையையும் உருவாக்கி வருகின்றனர்.
பொதுவாக ஒரு லாபுபு பொம்மையானது 30 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது. ஆனால் அரிதான அல்லது குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்படும் பொம்மைகளுக்கு விலை மிக மிக அதிகம்.
தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 130க்கும் மேற்பட்ட கடைகளில் லாபுபு பொம்மைகள் விற்பனையாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |