லண்டனில் பட்டப்பகலில் தனியாக சிக்கிய இந்திய வம்சாவளி நபர்: பின்னர் நடந்த கொடூர சம்பவம்
மேற்கு லண்டனில் குடியிருப்பு பகுதி ஒன்றில் தனியாக நடந்து சென்ற 65 வயது இந்திய வம்சாவளி நபர் குழு ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியே செல்லவே பயம்
மேற்கு லண்டனில் ஹிபர்னியா சாலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்குள் நடந்ததாகவே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Credit: mylondon
தாக்குதல் தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மாயமான நிலையில் அப்பகுதி மக்கள் அந்த முதியவரின் உதவிக்கு திரண்டுள்ளனர். இந்த நிலையில் சீக்கிய இளையோர் அமைப்பின் தலைவரான தீபா சிங் சம்பவ இடத்தில் அந்த முதியவருக்கு உதவ முன்வந்ததாகவும், தாக்குதலுக்கு இலக்கான நபர் பயத்துடன், நடந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாகவும் தீபா சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயத்தில் இருக்கும் அவர், அந்த நேரத்தில் வந்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளை முயற்சி
தற்போது உள்ளூர் குருத்வாரா அந்த நபரின் குடும்பத்தை கவனித்து வருவதாகவும், நடந்த சம்பவத்தில் முழு சீக்கிய சமூகமும் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
Credit: mylondon
இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் கொள்ளை முயற்சியாக இருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் விசாரணையுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |