பிரித்தானியாவில் குப்பை தொட்டிக்குள் கிடந்த சடலம்: CCTV காட்சிகளை ஆராயும் அதிகாரிகள்
பிரித்தானியாவில் குப்பை தொட்டிக்குள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை தொட்டிக்குள் கிடந்த சடலம்
பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் டெய்ம்லர் சாலைக்கு அருகே உள்ள கேஷ் பூங்காவில் குப்பை தொட்டிக்குள் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை அங்கிருந்து வெளியேற்றினர்.
முதல் கட்ட தகவலின் படி, உயிரிழந்தவர் 40 முதல் 50 வயதுடைய ஆண் என்று தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.
அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர் வேறொரு இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடல் இந்த பூங்காவில் கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் அதிகாரிகள் பூங்காவை சுற்றியுள்ள CCTV காட்சிகள் மற்றும் வாகனங்களின் Dash Cam காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |