பிரித்தானியாவில் மைதானத்தில் கிடந்த இளைஞர் சடலம்: கால்பந்து கிளப் அளித்துள்ள விளக்கம்
Man body found at uk Charlton Athletic Stadium: பிரித்தானியாவின் சார்ல்டன் அத்லெடிக் கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து மைதானத்தில் மீட்கப்பட்ட சடலம்
பிரித்தானியாவில் சாம்பியன்ஷிப் கால்பந்து கிளப்பின் சார்ல்டன் அத்லெடிக்(Charlton Athletic) அணிக்கு சொந்தமான தி வாலி(The Valley) மைதானத்தில் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஃப்ளாய்ட்(Floyd) சாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் மனிதர் ஒருவரின் நலம் தொடர்பான கவலை குறித்து அவசர சேவையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மைதானத்தில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தீவிர விசாரணை
இளைஞரின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நபர் உயரமான இடத்தில் இருந்து விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணமாக என்றும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கால்பந்து கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் கிளப் தரப்பில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் விளக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |