ஒரே நாளில் 3 Rolls-Royce வாங்கிய தொழிலதிபர்., ஜெட், 2 ஹெலிகாப்டர்., சொத்து மதிப்பு?
இந்த நபர் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவிகளை வாங்கியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன், ரூ.178 கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானமும், இரண்டு ஹெலிகாப்டர்களும் வைத்துள்ளார். இந்த நபர் யார்?
ஒரே நாளில் 3 Rolls-Royce வாங்கியவர்
இவர் தான் கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers) தலைவர் டி.எஸ்.கல்யாணராமன் (TS Kalyanaraman).
இவரது ரூ. 25 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 3 Rolls-Royce சொகுசு கார்களின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பை உருவாக்கியது.
அவற்றில் ஒன்று சிறப்பு black badge ஆகும். மற்ற இரண்டு வழக்கமான Rolls-Royce Cullinan SUVகள் ஆகும்.
Rolls-Royce Cullinan Black Badge கார் magma red நிறத்திலும், மற்ற இரண்டு கார்களும் midnight sapphire மற்றும் diamond black நிறத்திலும் உள்ளன.
1000 கோடீஸ்வர விருந்தினர்கள்., 2500 வகை உணவுகள்., உணவுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்த அம்பானி குடும்பம்
6 Rolls-Royce கார்கள்
இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் மொடல்கள் இல்லாமல், டி.எஸ்.கல்யாணராமன் ஏற்கனவே மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கிறார்.
அவற்றில் ஒரு கார் Rolls-Royce Phantom Series I மற்றும் மற்ற இரண்டு கார்கள் Phantom Series II மொடல்கள் ஆகும்.
Jet Flight, Helicopters
கல்யாணராமன் தனது ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் ஒரு தனியார் ஜெட் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார்.
அவரது Embraer Legacy 650 ஜெட் விமானம் ரூ.178 கோடி மதிப்புடையது. மேலும், சுமார் ரூ.48 கோடி மதிப்புள்ள கனடாவைச் சேர்ந்த Bell 427 ஹெலிகாப்டரும் சொந்தமாக வைத்துள்ளார்.
கல்யாண் ஜூவல்லர்ஸ்
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா முழுவதும் மற்றும் வேறு சில நாடுகளில் கடைகளைக் கொண்டுள்ளது. கல்யாணராமன் தனது 12வது வயதில் தந்தையிடம் தொழிலை கற்கத் தொடங்கினார். இப்போது, இந்தியாவின் மிகப்பாரிய நகைக்கடைகளில் ஒன்றின் உரிமையாளர் என்ற பெருமைக்குரியவர்.
முதல் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஸ்டோர் 1993-இல் திறக்கப்பட்டது, அதன்பிறகு, அவர்கள் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் கடைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகிறது. United Arab Emirates, Qatar, Kuwait மற்றும் Oman போன்ற நாடுகளில் மொத்தம் 30 ஷோரூம்களை கொண்டுள்ளார்.
கடன் வாங்கி நகைக்கடை
கேரள வர்மா கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தாலும் கல்யாணராமன் குடும்பத் தொழிலில் ஆர்வம் காட்டவில்லை. வேறு இடத்தில் வேலை செய்து ரூ.25 லட்சத்தை மிச்சப்படுத்தி நகைக்கடை திறக்கலாம் என நம்பினார்.
ஆனால் அவரது கனவை நனவாக்க அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டது. எனவே வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்க முடிவு செய்தார்.
டி.எஸ்.கல்யாணராமன் சொத்து மதிப்பு
கேரளாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்த கல்யாணராமன், தனது தொழிலை வெற்றிகரமாக செய்து, இப்போது இந்தியாவின் பணக்கார நகை வியாபாரி என்று அறியப்படுகிறார்.
Forbes அவரது நிகர மதிப்பை சுமார் $3.1 பில்லியன் என மதிப்பிட்டுள்ளது. அதாவது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூபா 95,500 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
TS Kalyanaraman, TS Kalyanaraman Net worth, TS Kalyanaraman Rolls Royce Collection, three Rolls Royce on one day, Rolls-Royce Phantom, Rolls-Royce Cullinan SUV, Kalyan Jewellers Owner