ரூ 2.5 லட்சம் முதலீட்டில்... இன்று ரூ 5539 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய நபர்
வணிக உலகில் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகத் திகழ்பவர் பிபின் ஹத்வானி. கோபால் ஸ்நாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இந்த பிபின் ஹத்வானி.
கிராமங்களில் சென்று விற்பனை
மிகவும் சாதாரணமாக அவர் தொடங்கி இருந்தபோதிலும், வணிக உலகில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி அசாதாரண வெற்றியைப் பெற முடிந்தது. சிறுவயதில் அவரது தந்தை தமது கிராமத்துக் கடையில் நொறுக்குத்தீனி வியாபரம் செய்து வந்ததால்,
அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என ஆர்வம் கொண்டார். அவரது தந்தை சுவையான குஜராத்தி நொறுக்குத்தீனிகளைச் செய்தார், அதை ஹத்வானி தனது சைக்கிளில் அருகிலுள்ள கிராமங்களில் சென்று விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில், காலங்கள் செல்ல தனது தந்தையுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, 1990ல் சொந்தமாக தொழில் செய்யும் முடிவுக்கு வந்தார். தொடக்கத்தில் வெறும் ரூ 4,500 முதலீட்டில், அதுவும் தமது தந்தையிடம் கடனாக வாங்கிய பணத்தில் சின்னதாய் கடை தொடங்கியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், ரூ 2.5 லட்சம் முதலீட்டில் புதிதாக, எந்த பங்குதாரரும் இல்லாமல் கோபால் ஸ்நாக்ஸ் என தனியாகத் தொடங்கியுள்ளார். சொந்த வீட்டை வாங்கிய ஹத்வானி, அதில் நொறுக்குத்தீனிகள் தயாரிக்கும் சமயலறையை உருவாக்கினார்.
பாரம்பரிய சிற்றுண்டி
மட்டுமின்றி, ராஜ்கோட்டின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிச் சென்று, உள்ளூர் சந்தையை நன்கு புரிந்துகொள்வதற்காக வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுடன் உரையாடுவார். அவரது அர்ப்பணிப்பு பலனளிக்கத் தொடங்கியது.
அவரது தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து நகருக்கு வெளியே நிலம் வாங்கி, தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினார். இன்று, சந்தை மதிப்பின் அடிப்படையில் கோபால் ஸ்நாக்ஸ் இந்தியாவின் நான்காவது பெரிய பாரம்பரிய சிற்றுண்டி பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் 2.5 லட்சம் முதலீட்டில் துவங்கப்பட்ட கோபால் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 5539 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |