பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொலிசரை அழைத்த நபர்: திடுக்கிடவைத்த காட்சி
பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பொலிசாருக்கு தகவலளித்தார் அமெரிக்கர் ஒருவர். பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்தபோது கண்ட காட்சி அவர்களை திடுக்கிடவைத்தது.
துர்நாற்றம் வீசிய வீட்டிலிருந்து வந்த பெரிய ஈக்கள்
அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும், வழக்கத்தைவிட பெரிய ஈக்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வருவதையும் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிசார் அந்த வீட்டுக்குச் செல்லவும், வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டுக்கொண்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் உடல் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
Image: ABC13
அடுத்த அதிர்ச்சி
அந்த வீட்டை பொலிசார் சோதனையிடும்போது, வேறொரு அறைக்குள் மற்றொரு ஆணின் சடலம் கிடப்பதையும் பொலிசார் கண்டுள்ளனர்.
அந்த நபர் இறந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என்பதை அவரது அழுகிய உடல் உணர்த்தியுள்ளது.
Image: ABC13
ஆக, இப்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர், இறந்து அழுகிய நிலையில் காணப்பட்ட நபரின் உடலுடன் பல மாதங்களாக அதே வீட்டிலேயே வாழ்ந்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. பொலிசார் இந்த மரணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Image: ABC13
Image: ABC13

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.