நான் உயிருடன் இருக்கிறேன்... ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாயமான நிலையில், அவரை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள் பொலிசார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்டுவந்த நபர், நேற்று முன்தினம் பொலிஸ் நிலையம் ஒன்றிற்குச் சென்று தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாயமான நபர்

இங்கிலாந்திலுள்ள பிராட்ஃபோர்டில் வாழ்ந்துவந்த இஸ்மாயில் அலி (51)என்னும் நபர், கடந்த 2020ஆம் ஆண்டு மாயமானார்.
அவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்துவந்த நிலையில், அலி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இந்த வாரம், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்துள்ளார்கள் பொலிசார்.
இந்நிலையில், புதன்கிழமையன்று மேற்கு யார்க்ஷையரிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு வந்த அலி, தான் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கு சென்றார், என்ன நடந்தது என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அவரைக் காணாமல் கவலையில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினருக்கு அவர் உயிருடன் இருப்பது குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |