தன்னால் சீரழிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூக ஊடகத்தில் குறுஞ்செய்தி அனுப்பி சிக்கிய நபர்
இளம்பெண் ஒருவரை சீரழித்துவிட்டு தலைமறைவாக இருந்த அமெரிக்கர் ஒருவர், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூக ஊடகத்தில் செய்தி ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து வகையாக சிக்கினார்.
இளம்பெண்ணை சீரழித்த அமெரிக்கர்
2013ஆம் ஆண்டு, Ian Thomas Cleary என்னும் 20 வயது மாணவர், Shannon Keeler என்னும் 18 வயது மாணவியை, அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்து வன்புணர்ந்துள்ளார்.
ஷனோன் தனது தோழிகளை உதவி கோரி அழைக்க, தாமஸ் தலைமறைவாகிவிட்டார், அவர் தனது அறைக்குத் திரும்பவேயில்லை.
இத்தனை ஆண்டுகள் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலையில், 2021ஆம் ஆண்டு, ஷனோனுக்கு பேஸ்புக்கில் சில செய்திகள் வந்துள்ளன.
நான் உன்னை நாசம் செய்துவிட்டேன், இனி யாருக்கும் நான் அப்படி எதையும் செய்யமாட்டேன், உன் குரலைக் கேட்க ஆசைப்படுகிறேன், உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என தொடர்ச்சியாக செய்திகள் வரவே, அந்த செய்திகளுடன் பொலிசாரிடம் சென்றுள்ளார் ஷனோன்.
பிரான்சில் சிக்கினார்
தாமஸ் பெயரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சர்வதேச பொலிசார் அவரைத் தேடிவந்த நிலையில், ஏப்ரல் மாதம், 24ஆம் திகதி, பிரான்சில் வாகன சோதனை ஒன்றின்போது சிக்கினார் இப்போது 31 வயதாகும் தாமஸ்.
இந்நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று நேற்று அனுமதியளித்துள்ளது. அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் முயற்சியை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |