இலங்கையில் பாடசாலைக்கு அருகே இளைஞர் கைது: 220 போதை மாத்திரைகள் கைப்பற்றல்
இலங்கையில் பாடசாலைக்கு அருகே போதைப்பொருளுடன் சுற்றித்திரிந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இளைஞர் கைது
தென்னிலங்கையின் உள்ள பாடசாலைக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 220 போதை மாத்திரைகள் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஹொரணை பிரதேசத்தில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அப்பகுதி பொலிஸாரின் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |