கனடாவில் இருந்து 3 பாம்புகளை கால்சட்டைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த நபருக்கு நேர்ந்த கதி!
கனடாவில் இருந்து 3 Burmese பாம்புகளை கடத்தி வந்த நபர் கைது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு Burmese பாம்புகளை கால்சட்டையில் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைதான நபர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நியூயார்க்கை சேர்ந்த Calvin Bautista (36) என்பவர் கடந்த 2018 ஜூலை 15ஆம் திகதி 3 பாம்புகளை கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கால்சட்டையில் மறைத்து வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
Burmese மலைப்பாம்புகளை இறக்குமதி செய்வது சர்வதேச ஒப்பந்தம் மற்றும் கூட்டாட்சி விதிமுறைகளால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
FREEPIK
கைதான Calvin சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின்னர் நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கவுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் $250,000 அபராதம் விதிக்கப்படும்.
Burmese மலைப்பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாகும்.
இந்த இனம் அமெரிக்காவின் புளோரிடாவில் ஊடுருவி உள்ளது, அங்கு அது பூர்வீக விலங்குகளை அச்சுறுத்துகிறது எனவும் தெரியவந்துள்ளது.