கனடாவில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரை கடுமையாக தாக்கியதற்காக வீட்டு உரிமையாளர் கைது
கனடாவில் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரை கடுமையாக தாக்கிய வீட்டு உரிமையாளர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
மர்ம நபர்
ஒன்ராறியோவின் லிண்ட்சேயில் வசிக்கும் 44 வயது நபர் ஒருவர், அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் தனது வீட்டிற்குள் ஊடுருவதைக் கண்டுள்ளார்.
உடனே அந்நபரை வீட்டின் உரிமையாளரான குறித்த 44 வயது நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மர்ம நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதால், டொராண்டோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
கடுமையான தாக்குதல்
இதற்கிடையில் கவர்தா லேக்ஸ் காவல்துறை, வீட்டிற்குள் நுழைந்த நபரை தாக்கிய வீட்டு உரிமையாளரை கைது செய்தனர்.
அவர் மீது கடுமையான தாக்குதல் மற்றும் ஆயுதத்தால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர், ஏற்கனவே பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதனால், மருத்துவமனையில் இருந்து வெளியேற போதுமான அளவு குணமடைந்ததும் காவலில் எடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |