பிரித்தானியாவில் காணாமல் போன பெண் சாலையில் இறந்து கிடந்த துயரம்! பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்
பிரித்தானியாவில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், 29 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை Megan Newborough’s என்ற 23 வயது பெண் காணமல் போய்விட்டதாக, Warwickshire பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில், Woodhouse Eaves அருகே இருக்கும் Charley சாலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், 29 வயது மதிக்கத்தக்க இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து Leicestershire பொலிஸ் அதிகாரி Macullam கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக Ross Macullam என்ற நபரை கைது செய்து, காவலில் வைத்துள்ளோம், இவர் நாளை Leicester Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்து கிடந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முக்கிய தகவலும் வெளியாகியுள்ளதால், தொடர் விசாரணைக்கு பின்னர் இந்த கொலை சம்பவத்தில் பல உண்மைகள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த கொலை வழக்கு தொடர்பாக யாரேனும் தகவல் தெரிந்தாலோ, சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தாலோ உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கும் படி, அந்த பெண்ணின் பெற்றோர் வேதனையுடன் கூறியுள்ளனர்.