கனடாவில் வேலை! தம்பதியின் வலையில் விழுந்த நபருக்கு நேர்ந்த நிலை... எச்சரிக்கை செய்தி
கனடாவில் வேலை கிடைக்கும் என நம்பி தம்பதியின் வலையில் வீழ்ந்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் நபர் ஒருவர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). இவரிடம் பழக்கமான திருச்சி மாவட்டம் மருவத்துாரைச் சேர்ந்த பெரியசாமி, இவரது மனைவி சத்யா, அதே ஊரைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோர் கனடாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய பரமசிவம், கடந்த செப்டம்பர் மாதம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார். மீதி பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது விமான நிலையத்தில் தருவதாக கூறியுள்ளார்.
இதன்பின்னர் தம்பதி உள்ளிட்ட மூவரும் பணத்தை பெற்றுக் கொண்டு, பரமசிவத்தை கனடாவுக்கு வேலைக்கு அனுப்பி வைக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பெரியசாமியின் வீட்டிற்குச் சென்று பணத்தைத் திருப்பி தருமாறு பரமசிவம் கேட்டார்.
பணத்தை தர மறுத்து, மூவரும் பரமசிவத்தை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பரமசிவம் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, பெரியசாமி, சத்யா, அறிவழகன் ஆகியோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.