பிரான்ஸில் இருந்து சொந்த ஊர் திரும்பி மறுமணம் செய்ய முயன்ற 75 வயது முதியவருக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி
இரண்டாவது திருமணத்திற்கு தயாரான 75 முதியவர்.
பல லட்சங்களை இழந்த அதிர்ச்சி சம்பவம்.
பிரான்ஸில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற தமிழர் மறுமணம் செய்ய ஆசைப்பட்டு பல லட்சங்களை இழந்த சம்பவம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தருவதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் பிள்ளைகள் பிரான்ஸில் தற்போது வசிக்கும் நிலையில் மனைவியுடன் புதுச்சேரிக்கு வந்து வசித்து வந்தார்.
கடந்தாண்டு வேணுவின் மனைவி உயிரிழந்தார், இதையடுத்து தனிமையில் வசித்த அவர் மறுமணம் செய்ய நினைத்தார். இது குறித்து அறிந்த வேணு வீட்டில் வாடகைக்கு இருந்த ரவிசங்கர் ஒரு பெண்ணின் படத்தை காட்டி அவரது பெயர் சுருதி என்ற லாவண்யா என்றும் அவரது செல்போன் என்று கூறி ஒரு எண்ணையும் கொடுத்துள்ளார்.
onlymyhealth
சில தினங்களில் அந்த மொபைல் எண்ணில் இருந்து வேணுவிற்கு, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் வந்தது. அதன் பின் இருவரும் பேசி கொண்ட நிலையில் சுருதி திருமணத்திற்கு சம்மதித்தார்.
திருமண செலவிற்கு, 9 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கூறியதை நம்பி வேணு அனுப்பினார். பின்னர் வேணு திருமணத்திற்காக ரூ. 3 லட்சத்தில் நகைகள் வாங்கியுள்ளதாக சுருதியிடம் கூற அதை ரவிசங்கரிடம் கொடுத்து அனுப்ப சுருதி சொன்னார்.
இந்த நகையை வாங்கி சென்ற ரவிசங்கர் வீட்டையும் காலி செய்து தலைமறைவானார். இதையடுத்து சந்தேகமடைந்த வேணு, ரவிசங்கர் மற்றும் சாட்டிங் மொபைல் போன் எண்களை தொடர்பு கொண்டபோது, இரு எண்களும் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்
இதையடுத்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.