கனடாவுக்கு சென்று வேலை செய்ய போகிறோம் என்ற கனவில் மிதந்த நபர்! சுக்குநூறான பரிதாபம்... எச்சரிக்கை செய்தி
கனடாவில் வேலை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நபர் ஒருவர் பெரியளவில் ஏமாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவையில் உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாத் (43) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ள இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்திருக்கிறார்.
பின்னர் ஊருக்கு திரும்பிய கோபிநாத் மீண்டும் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பினார். இதையடுத்து 2019ல் ஓன்லைனில் தேடினார். கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக, ஓன்லைனில் தொடர்பு கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதனை நம்பிய கோபிநாத், அந்நபர்கள் கூறியபடி, வங்கி கணக்கில் வெவ்வேறு தவணைகளில், 4.30 லட்சம் ரூபாய் செலுத்தினார். பணம் வாங்கிய நபர்கள், உறுதியளித்தபடி, வேலை வாங்கித் தரவில்லை.
கனடாவில் வேலை பார்க்க போகிறோம் என் கனவில் இருந்த கோபிநாத் காத்திருந்து ஏமாந்தார், பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்துள்ளார்.
புகாரையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்த அனுபவம் கொண்ட கோபிநாத் உஷாராக இல்லாமல் இப்படி ஏமாந்துள்ள மோசமான அனுபவத்தை பெற்றுள்ளது மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது.