ரசகுல்லா வடிவில் நாட்டு வெடிகுண்டு! ஆசையாக சாப்பிட்டவர் மரணம்
Man Chews 'Rasgulla' Shaped Bomb: இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ரசகுல்லா வடிவில் இருந்த நாட்டு வெடிகுண்டை சாப்பிட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
35 வயது மதிக்கத்தக்க ராஜேந்திரா என்பவருக்கு அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாக ரசகுல்லா தோற்றத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டை கொடுத்துள்ளார்.

அதை ராஜேந்திரா வாயில் வைத்து கடித்ததும் வெடித்துள்ளது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த நண்பரின் பெயர் ராம்பகத் என்பதும் தர்மு என்பவரிடமிருந்து வாங்கியதும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராம்பகத் மீது Bharatiya Nyaya Sanhita மற்றும் Explosives Act போன்ற பிரிவுகளில் போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.