மனைவிக்காக வேண்டிக்கொண்டு நாக்கை அறுத்த கணவர்! தெரிய வந்த காரணம்
இந்திய மாநிலம் சத்தீஷ்காரில் நபர் ஒருவர், தனது மனைவிக்காக நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
வாய் பேச முடியாத மனைவி
சத்தீஷ்கார் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்வர் நிஷாத் (33). இவரது மனைவி வாய் பேச முடியாதவர்.
இதனால் நிஷாத் மனைவியை நினைத்து வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேஷ்வர் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார்.
கடவுளுக்கு காணிக்கை
அங்கு அவர் கரையில் நின்றபடி மந்திரங்களை உச்சரித்து திடீரென தனது நாக்கை அறுத்துள்ளார். பின்னர் ரத்தம் சொட்ட அவர் சிவன் கோவிலுக்கு சென்றதைப் பார்த்த சிலர், உடனடியாக நிஷாத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது வாய் பேச முடியாத மனைவிக்கு பேச்சு வர வேண்டி, கடவுளுக்கு தனது நாக்கை காணிக்கையாக கொடுக்க நிஷாத் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |