கடைசிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்ற வீரர்கள்
ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் கண்ணீருடன் விடைபெற்றார்.
மான்செஸ்டர் சிட்டி தோல்வி
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஸ்டோன்ஸ் (John Stones) 10 ஆண்டுகளாக மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வந்தார்.
The final act for John Stones at City 🩵 pic.twitter.com/4H1MSW3Ilh
— Manchester City (@ManCity) May 24, 2026
நேற்று நடந்த பிரீமியர் லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிராக தனது கடைசிப் போட்டியில் ஸ்டோன்ஸ் விளையாடினார்.
இப்போட்டியில் ஆஸ்டன் வில்லா தரப்பில் ஓலி வாட்கின்ஸ் இரண்டு கோல்கள் (46, 61வது நிமிடம்) அடிக்க, மான்செஸ்டர் சிட்டி 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஸ்டோன்ஸ், சில்வா கண்ணீர்
அதனைத் தொடர்ந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது ஸ்டோன்ஸ் கண்ணீர் சிந்தினார்.

அதேபோல் சக வீரரான பெர்னார்டோ சில்வாவும் (Bernardo Silva) விடைபெற்றதால் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
இது சக வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |