இது தான் செய்யப் போகிறேன்... ராணியாரின் படுக்கையறையில் அத்துமீறி நுழைந்த நபர் கூறிய வார்த்தை
அரண்மனை ஊழியர் மது போதையில் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டதாகவே ராணியார் கருதியுள்ளார்.
ராணியாரின் மறைவுக்கு கவலை தெரிவித்துள்ளதுடன், அவர் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்ற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய ராணியாரின் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் தற்போது மிகுந்த வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1982ல் மைக்கேல் ஃபாகன் என்பவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் இரண்டு முறை அத்துமீறி நுழைந்துள்ளார். மட்டுமின்றி, ராணியாரின் படுக்கையறைக்குள் நுழைந்து திரைகளைத் திறந்த போது ராணியார் கண்விழித்ததாகவும் கூறப்படுகிறது.
@Royal Residences
மட்டுமின்றி, ராணியாருடன் தமது குடும்பம் தொடர்பில் 10 நிமிடங்கள் வரையில் பேசியதாகவும் ஃபாகன் தெரிவித்துள்ளார். முதலில், அரண்மனை ஊழியர் ஒருவர் மது போதையில் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டதாகவே ராணியார் கருதியுள்ளார்.
மட்டுமின்றி, ஊழியர் ஒருவரை அனுப்பி ஃபாகனுக்கு தேவையான மது அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் அரியணையிலும் ஃபாகன் அமர்ந்து வேடிக்கை செய்ததுடன், திராட்சை மதுவும் அருந்தியுள்ளார்.
தற்போது 74 வயதாகும் ஃபாகன், ராணியாரின் மறைவுக்கு கவலை தெரிவித்துள்ளதுடன், அவர் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்ற இருப்பதாகவும் கூறியுள்ளார். ராணியாரின் மறைவு தம்மை பாதித்ததாக கூறும் ஃபாகன், அது தொடர்பில் மேலும் பேச தாம் விரும்பவில்லை என்கிறார்.
@shutterstock
ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு தாம் செல்ல விரும்பவில்லை எனவும், ஆனால் தேவாலயம் சென்று ஒரு மெழுகுவர்த்தியேனும் ஏற்ற வேண்டும் என்கிறார் ஃபாகன்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியார் தங்கும்போது அத்துமீறி நுழைந்த முதல் நபர் இந்த ஃபாகன்.
ஆனால், அதன் பின்னர் பலர் முயன்றதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தியதாகவும் கூறுகின்றனர்.