பிரிந்து சென்ற மனைவி, சோகத்தில் கணவர் எடுத்த தவறான முடிவு!
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மனைவி பிரிந்துசென்ற சோகத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த நத்தமேடு கம்பர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (54).
கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்ராஜுக்கும் அவரது மனைவி மற்றும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரும் சுந்தர்ராஜை விட்டு இருவரும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுந்தர்ராஜ் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனவிரக்தியில் இருந்த சுந்தர்ராஜ் தற்கொலை முடிவை எடுத்து விஷம் அருந்தியுள்ளார்.
இதில் அவர் உயிரிழந்துவிட்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர்ராஜ் உடலை கைப்பற்றினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.