கடையை காலி செய்யச் சொன்ன அதிகாரிகள்: பிரான்ஸ் நாட்டவர் எடுத்த திடுக் முடிவு
பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் கடை வைத்திருந்த நிலையில், அதிகாரிகள் அவரது கடையை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்கள்.
திடுக் முடிவு
பிரான்ஸ் நாட்டவரான 66 வயது நபர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில், கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.
என்ன காரணம் என்று தெரியவில்லை, அதிகாரிகள் அவரை கடையை காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் மூன்று பொலிசார் அவரது கடையை காலி செய்யும் நடவடிக்கையில் இறங்க, சட்டென தனது துப்பாக்கியை எடுத்த அவர், தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தும், அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |