Tata Motors -யை கடனில்லாமல் மாற்றிய நபர்.., அவருக்கு வழங்கிய ஊதியம் எவ்வளவு?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) குழுமத்தில் முக்கிய நபராக இருக்கும் நபரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் முக்கிய நபராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் இருப்பவர் பிபி பாலாஜி. இவர், ஏர் இந்தியா, டைட்டன், டாடா டெக்னாலஜிஸ் மற்றும் டாடா கன்சியூமர்ஸ் ஆகிய நிறுவனங்களில் வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் டாடா நிறுவனத்தில் அதிகாரமிக்க நபராக மாறி வருகிறார். டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், கடந்த 2017 -ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக பிபி பாலாஜி தேர்வு செய்யப்பட்டார்.
இவர், இதற்கு முன்னதாக யூனிலிவர் நிறுவனத்தில் நிதி செயல்பாடுகளுக்கு தலைமை வகித்து வந்தார். யூனிலிவர் நிறுவனத்தில் விற்பனை வளர்ச்சியடைய சிறப்பாக பணியாற்றியதால் தான் என் சந்திரசேகரன் இவரை தேர்வு செய்தார்.
இவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பொறுப்பேற்ற பிறகு நிதி செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். தேவையற்ற செலவினங்களை குறைத்து கடனில்லாமல் மாற்றினார்.
முக்கியமாக இவர் வந்தவுடன் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன பிரிவில் அதிக லாபம் வந்தது. அதோடு, ஆயிரம் கோடி பணத்தை கையிருப்பாக கொண்டிருக்கும் நிறுவனம் என்ற பெயரையும் பெற்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது 2024 -ம் நிதி ஆண்டில் ரூ.4.38 லட்சம் கோடி வருமானத்தை பெற்றுள்ளது.
இதற்கு காரணமாக பிபி பாலாஜியின் செயல்பாட்டை பாராட்டி டாடா நிறுவனம் இவருக்கு 2024 -ம் ஆண்டில் ரூ.20 கோடி ஊதியமாக வழங்கியுள்ளது. இந்த தொகை கடந்த 2023ஆம் ஆண்டினை விட 24% அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |