லண்டனில் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி வழக்கு: சிறை செல்லும் நபர்
லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தியும் சிக்கிய வழக்கில் தற்போது ஒரு நபர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய கேரளச் சிறுமி
கடந்த ஆண்டு, மே மாதம் 29ஆம் திகதி, இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தை மற்றும் தாயுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஒரு 9 வயது சிறுமி.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவர் சுட்டதில் ஒரு குண்டு உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த அந்தச் சிறுமி மீது பாய்ந்துள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்ட நாஸர் அலி (43), கேனான் அய்தோக்டு (45) மற்றும் முஸ்தபா கிஸில்டன் (35) ஆகியோருடன், அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
 
    
    பிரித்தானியாவின் பிரபல காதல் ஜோடி: 3 ஆண்டுகளுக்கு பின் திருமண நிச்சயதார்த்தம்: குவியும் வாழ்த்துக்கள்
விடயம் என்னவென்றால், அந்தச் சிறுமியின் மண்டை ஓடு சேதமடைந்ததால், அவளது மண்டை ஓட்டின் ஒரு பகுதிக்கு பதிலாக, பிளாட்டினம் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவள் மீது பாய்ந்த குண்டு இன்னமும் அவளது மூளைக்குள்ளேயே இருப்பதால், அதன் பக்க விளைவுகளை அவள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதுதான் சோகம்.
ஒரு நபர் குற்றவாளி
இந்த வழக்கில் தற்போது ஒரு நபர் குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஆனால், அவர் அந்தச் சிறுமியை துப்பாக்கியால் சுட்டவர் அல்ல. அவரது பெயர் Javon Riley (33).

உண்மையில் அது இரண்டு குழுக்களுக்கு இடையில் நடந்த மோதல். அதில், அந்தச் சிறுமி மீது தவறுதலாக குண்டு பாய்ந்துவிட்டது.
துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடும்போது, அவரை தனது காரில் ஏற்றிச் சென்று காப்பாற்றியர்தான் இந்த Riley.

ஆக, உண்மையான குற்றவாளி இதுவரை சிக்கவேயில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
அவருக்கு உதவியதற்காகத்தான் Riley தற்போது வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி Rileyக்கு தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள நீதிபதி Mark Lucraft, அவர் நீண்ட காலம் சிறையில் செலவிட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        