பிரித்தானியாவில் 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள புத்தகங்களை திருடி விற்க முயன்ற நபர்
பிரித்தானியாவின் கிழக்கு சஃபோல்க்கில் நபர் ஒருவர், 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள புத்தகங்களை திருடி விற்க முயன்ற குற்றச்சாட்டில் விசாரணை எதிர்கொண்டார்.
சஃபோல்க்கின் Becclesஐ சேர்ந்த மதுபான விடுதியின் உரிமையாளர் கிறிஸ்டோபர் நன் (42). இவர் கடந்த 2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் சிறப்பு சட்டம், வரி மற்றும் கணக்கியல் புத்தகங்களை வெளியிடும் LexisNexisயில் இருந்து அதிக மதிப்புள்ள புத்தங்கங்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் இயக்கிய கணக்குகள் மூலம் பணத்தை அனுப்புவதன் மூலம் குற்றவியல் சொத்துக்களை மறைத்து, மாறுவேடமிட்டு, மாற்றியமைத்து அல்லது அகற்றியதாகக் கூறி, அவர் பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
இந்த புத்தகங்களின் மதிப்பு 300,000 பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை நன் அமேசானியில் விற்க முயன்ற நிலையில் பிடிபட்டார்.
Ipswichயில் நீதிபதிகள் முன் நிறுத்தப்பட்டபோது, நன் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் எந்த வாதத்தையும் பதிவு செய்யவில்லை.
பத்து நிமிட விசாரணையின்போது தனது வாதத்தை பதிவு செய்யவும், தனது பெயர், பிறந்த திகதி மற்றும் அவரது வணிகத்திற்கு அருகில் உள்ள வீட்டு முகவரியை உறுதிப்படுத்தவும் மட்டுமே அவர் பேசினார்.
தலைமை நீதிபதி ஸ்டீபன் பாவே, குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. எனவே வழக்கை கிரவுன் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதுடன், நனுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கி, மார்ச் 10ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |