லண்டனில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்! பட்டப்பகலில் நடந்த துயர சம்பவம்
லண்டனில் கிரேன் ஒன்று அதிக எடை கொண்ட பொருளை கீழே இறக்கும் போது, எதிர்பாரமல் நடந்த விபத்தில் நபர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் உள்ள Old Street-க்கு அருகில் இருக்கும் East சாலையில், இன்று(21.12.2021) பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1.30 மணியளவில் கிரேன் விபத்தால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் ஆகியோருடன் பொலிசார் விரைந்துள்ளனர். ஆனால், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்பதை சோதித்து பார்த்த மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபல உள்ளூர் ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த சம்பவம் சரியாக Vestry Street-க்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் நடந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி வழியே உள்ள இரண்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இப்பகுதி வழியே செல்லும் 21, 76, 141, 271 பேருந்துகள் மாற்றுப்பாதையில் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து Metropolitan police-ன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இன்று(21.12.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவை East சாலையில் உள்ள, Hoxton, N1-ல் உள்ள ஒரு கட்டிடத்தில், கிரேன் ஒன்று அதிக எடை கொண்ட பொருளை இறக்கும் போது, அது கீழே விழுந்ததால் நபர் ஒருவர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் உடனடியாக தீயணைப்பு படை மற்றும் லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவை அப்பகுதிக்கு விரைந்துள்ளது. ஆனால், அந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த நபர் யார் என்ற விசாரணையும், அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.