லண்டனில் இரயில் வரும் போது ப்ளாட்பார்ம் விளிம்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து செல்ஃபி எடுக்க முயன்ற நபர்! அடுத்து நடந்த சம்பவம்
லண்டன் சுரங்க இரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் விளிம்பில் கால்களை தொங்கபோட்டு செல்ஃபி எடுக்க இளைஞன் முயன்றதால் அவ்வழியாக வந்த இரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
மேற்கு லண்டனில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. Knightsbridge Tube நிலையத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு 8 மணி வாக்கில் நபர் ஒருவர் இரயில் பிளாட்பார்ம் விளிம்பில் கால்களை தொங்கபோட்டு செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார்.
இதையடுத்து அந்த தண்டவாளத்தில் வந்த இரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு அதிகாரிகள் வந்த நிலையில் குறித்த நபர் கட்டுபாடுகளை மீறியதாக அவர் மீது புகார் வந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், Knightsbridge இரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் இரவு 7.53 மணியளவில் அழைக்கப்பட்டனர்.
பிளாட்பார்ம் முனையில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தார் அவர். விசாரணையில் செல்ஃபி எடுக்க அப்படி உட்கார்ந்ததாக கூறினார். இதன் காரணமாக இரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
மேலும் 40 நிமிடங்களுக்கு இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இரயில் நிலையம் மூடப்பட்டது.
பின்னர் இரயில் நிலையம் திறக்கப்பட்டதாக கூறியுள்ளார்.