எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில்
சீனாவில் 1966ல் பிறந்தவர் Wang Chuanfu. பாடசாலை காலகட்டத்தில் தமது பெற்றோரை இழந்தார். நெருக்கடியான சூழலில் அவரது கல்விக்கு உதவ அவரது மூத்த சகோதரர் முன்வந்தார்.
ஒரு துணிச்சலான முடிவு
கடும் உழைப்பாளியான வாங் பெய்ஜிங் இரும்பு அல்லாத உலோக ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை அடுத்து ஷென்சென் பகுதிக்கு குடிபெயர்ந்து தனது கல்வி மையத்தால் தொடங்கப்பட்ட பேட்டரி நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.
அங்கு, பேட்டரி தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் எதிர்காலம் தொடர்பில் அறிந்துகொண்டார். 1995 ஆம் ஆண்டில், 352,000 டொலர் கடன் வாங்கிய பணத்துடனும் 20 பேர் கொண்ட குழுவுடனும், வாங் BYD என்ற நிறுவனத்தை நிறுவினார்.
தொடக்கத்தில், BYD நிறுவனம் பேட்டரிகள் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால் வாங் பேட்டரி தொழில்நுட்பத்தை ஆட்டோமொபைல்களுடன் இணைக்கும் வாய்ப்பைக் கண்டார். 2003 ஆம் ஆண்டில், வாங் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.
முன்னோக்கி செல்ல தத்தளிக்கும் ஒரு கார் நிறுவனத்தை 38 மில்லியன் டொலருக்கு வாங்கினார். அத்துடன், கார் தயாரிப்பைப் புரிந்து கொள்ள, வாங் ஒரு தனித்துவமான அணுகுமுறையை எடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பயன்படுத்திய கார்களை வாங்கிய வாங், அவற்றைப் பிரித்து, அவற்றின் வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டார்.
மின்னல் வேக சார்ஜிங்
2008 ஆம் ஆண்டில், அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட் 230 மில்லியன் டொலர் முதலீடு செய்ததை அடுத்து BYD நிறுவனம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது. வாரன் பஃபெட்டின் இந்த முடிவு BYD நிறுவனத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, வேகமாக வளரவும் உலகளாவிய நம்பிக்கையைப் பெறவும் உதவியது.
BYD நிறுவனத்தின் வெற்றிக்கான முதன்மை காரணம், அந்த நிறுவனம் அதன் பல உதிரி பாகங்களை, குறிப்பாக பேட்டரிகளை தாமே தயாரிக்கிறது. இது செலவுகளைக் குறைக்கவும் BYD நிறுவனத்தை விரைவாக விரிவடையவும் அனுமதிக்கிறது.
சமீபத்தில் BYD நிறுவனம் புதிய மின்னல் வேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, இதனால் வெறும் ஐந்து நிமிடங்களில் 250 மைல்கள் தூரத்தை சேர்க்க முடியும்.
2024 ஆம் ஆண்டு வாக்கில், BYD நிறுவனம் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) தயாரிப்பாளராக மாறியது, 4.27 மில்லியன் வாகனங்களை வழங்கியதுடன் 107 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டியது.
தற்போது சீனாவின் புதிய எரிசக்தி வாகன சந்தையில் 32 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது, டெஸ்லாவின் பங்களிப்பு தற்போது கடும் சரிவடைந்து வெறும் 6.1 சதவீதம் மட்டுமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
59 வயதான வாங் சுவான்ஃபுவின் தற்போதைய சொத்து மதிப்பு 2730 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |